வேகம் வேரறுத்த வீரர்
மயங்காது புரத்தொழில் புரிவர்
அகத்தொழில் அந்நிலை கண்டவர்
அழிவில்லா அறிவுடை நாயகர்
சேர பலம் சரிவில்லா சேர்ந்தவர்
பேராக்கம் ஆற்றுதற்குடையவர்
அடைந்தன அழிவிற்கழியாதிருத்தினர்
தானழிய காயம் கடந்தார்
இருளாந்தகன் தானாழி என்றடியார் தான் வாழி பாடவருள் பெற்ற
வீழா மடியா உயர்வாரி தன்பதம் என்றுமே உயர கண்டான்
பொழிப்புரை:
சோம்பேறியாக இருப்பவர் சுறுசுறுப்பாக மாற வேண்டும்
சுறுசுறுப்பாக இருப்பவர்
ஆச்சாரத்தை கடைபிடித்து நிதானம் பெறவேண்டும்
நிதானமானவர்கள் அறிவை பெறவேண்டும்
அறிவை பெற்றவர் சக்தியை அடையவேண்டும்
சக்தியுள்ளேர் ஆக்க வேண்டும்
ஆக்கியவர் நிலைத்திடவேணும்
நிலைத்தோர் வீடு செல்ல வேண்டும்
எவரும் குருவருளாள் (தன் குரு பக்தி பலத்தால்) மனம் சந்சலம் இல்லாமல் அனைத்து நிலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து செல்ல வேண்டும்
Comments
Post a Comment