கடிந்தும் கடையும் தான்
ஆழடிச்சேர் கரும் போதில்
இயல்பிலிர சீறல் முன்னம்
சிறப்பன்று தீதொழிதல் வழி
பொருள்
நாம் ஒரு அடிமை அல்லது போதையூட்டும் பழக்கத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் தருவாயில்
ஆழ் அடி சேர் - பழக்கம் நம்முள்ளே ஆழமாய் ஊன்ற மரத்திற்கு வேரூன்றுவது போல் ஒவ்வொரு அடியாக சேர்ந்து விடும்.
கரும் போது - கருமையான அல்லது கெட்ட பொழுது
நம்மை நாமே கடிந்து கொள்ளும் போது இது கண்டிப்பாக முடியும் என்று சீறி வீறுகொண்டு நம்முடைய இயல்பு வாழ்க்கைக்கு திருப்பிவிட வேண்டும்
ஏனெனில் தீய பழக்கங்கள் முதலில் நம் இயல்பு வாழ்க்கையை தான் பாதிக்கும். இயல்பு வாழ்க்கையிலிருந்து நம்மை முழுவதுமாக படை மாற்றிவிடும்
இவ்வேளையில் இயல்பு நிலைக்குத் திரும்பாது உட்கார்ந்து கொண்டு எவ்வாறு இந்த போதையூட்டும் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்று யோசித்து வழி தேடிக்கொண்டு இருப்பது பயனளிக்காது. நம்மை மேலும் மாயையில் தள்ளி குழப்பத்தையே தரும்.
Comments
Post a Comment